அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறு பதிவு: பா.ஜ.க. முன்னாள் நிர்வாகி அதிரடி கைது! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி, சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் எவரெஸ்ட் ராஜதுரை (வயது 47). இவர் முன்னாள் பா.ஜ.க சிறுபான்மை அணி நிர்வாகி ஆவார்.

இவர் அட்மினாக இருக்கும் வாட்ஸ் அப் குழுவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறான கருத்துகளையும் ஆபாசமாக விமர்சித்தும் ஆடியோ வெளியிட்டதாக தெரிகிறது. 

இந்த ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தி.மு.க நகர துணை செயலாளர் வெள்ள பாண்டியன் (வயது 73) என்பவர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் போலீசார் ராஜதுரை மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Udayanidhi Stalin against Defamation BJP Ex executive arrested


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->