மதுரை | கணுக்காலை இழந்த மாணவருக்கு அமைச்சர் உதயநிதி நேரில் சந்தித்து நிதியுதவி!
minister Udayanidhi Stalin help Madurai student
மதுரை, முத்துராமலிங்க தேவர் தெருவை சேர்ந்தவர் தீர்த்தம். இவரது மகன் பரிதி விக்னேஸ்வரன் (வயது 19) இவர் கோவையில் ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
ஜூடோ விளையாட்டு வீரரான இவர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பழக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மாநில அளவில் நடைபெற இருந்த ஜூடோ போட்டியில் பங்கேற்பதற்காக கடுமையான பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
இதற்கிடையே ஜூலை மாதம் அவரது நண்பர் வீட்டிற்கு சென்ற போது வழியில் பழுதான மின்கம்பத்தை கிரேன் மூலம் மின்சார வாரியத்தினர் அகற்றும் போது எதிர்பாராத விதமாக மின்கம்பம் அருந்து சாலையில் சென்று கொண்டிருந்த பரிதி விக்னேஸ்வரன் மீது விழுந்தது.
இதனால் அவரை உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவமனையில் அவரது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கணுக்கால் அகற்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இது குறித்து மாணவரின் தாய், போதி வருமானம் இன்றி தவிக்கும் எனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் எனது மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று மதுரை வந்துள்ளார்.
அப்போது விபத்தில் கணுக்காலை இழந்த பரிதி விக்னேஸ்வரனை நேரில் சந்தித்து ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
English Summary
minister Udayanidhi Stalin help Madurai student