கோவை விரையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! காரணம் என்ன?
Minister Udayanidhi Stalin visit Coimbatore
தமிழகத்தில் நடைபெற்ற முடிந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணி போட்டியிட்ட 40 இடங்களிலும் வெற்றியை பெற்றுள்ளது. இந்தியாவே வியந்து பார்க்கும் அளவுக்கு இந்த வெற்றியை திமுக அடைந்துள்ளதால் பாராட்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா, 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழா கொண்டாடப்பட உள்ளது.
கோவை, கொடிசியா மைதானத்தில் நாளை மாலை இந்த முப்பெரும் விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற எம்.பிகள், தி.மு.க எம்.எல்.ஏக்கள் என பலரும் பங்கேற்க உள்ளனர்.
இந்த விழாவில் முதலமைச்சர் பங்கேற்பதற்காக நாளை மதியம் கோவைக்கு செல்ல உள்ளார். இந்நிலையில் இன்று மாலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவைக்கு புறப்பட உள்ளார்.
அவர் முப்பெரும் விழா நடைபெறும் இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இந்த விழாவில் தமிழக முழுவதும் இருந்து தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சகணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர்.
முப்பெரும் விழாவை முன்னிட்டு மைதானத்தில் 150 அடி நீளத்தில் 40 அடி அகலத்தின் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary
Minister Udayanidhi Stalin visit Coimbatore