இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு நாட்டின் குடியரசுத்தலைவர், பிரதமர், பிரமாநில முதல்வர்கள், பல்வேறு அரசியில் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என்று பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

இதேபோல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவரது குடும்ப உறுப்பினர்களும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். மேலும், தனது குடும்பத்தினருடன் மிக எளிமையான முறையில் பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். 

அதன் பின்னர், தொண்டர்களை சந்திப்பதற்காக அண்ணா அறிவாலயத்திற்குச் சென்று அங்கு கலைஞர் அரங்க வளாகத்தில் மரக்கன்று நட்டு தண்ணீர் ஊற்றினார். இதைத்தொடர்ந்து அரங்கினுள் சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சேப்பாக்கம் அரசு கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில், இன்று பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்க மோதிரம் பரிசளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister uthayanithi stalin presented gold ring to today new born baby


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->