பாஜக அரசு பயத்திலேயே உள்ளது - அமைச்சர் உதயநிதி பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


பாஜக அரசு பயத்திலேயே உள்ளது - அமைச்சர் உதயநிதி பரபரப்பு பேட்டி.!

நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளி வீரர்-வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியதற்காக தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியதாவது:- 

"மத்திய பா.ஜ.க. அரசு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கல்வி என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரே தேர்தலுக்காக குழு அமைத்துள்ளது. இதனை தி.மு.க. அரசு தொடர்ந்து எதிர்க்கும். மத்திய பா.ஜ.க. அரசு மணிப்பூர் சம்பவம், கர்நாடகா தேர்தல் முடிவு, 'இந்தியா' கூட்டணி உள்ளிட்டவற்றால் பயத்தில் உள்ளது. 

மத்திய பாஜக அரசை ஒழிப்பதற்காகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காகவும் மனம் மற்றும் கொள்கை வித்தியாசங்களை மறந்து 'இந்தியா' என்ற கூட்டணி அமைந்துள்ளது. இதனால் தான் பா.ஜ.க. அரசு பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டியுள்ளது. 

கடந்த மார்ச் 1-ம் தேதி முதலைமைச்சருடைய பிறந்தநாளில் 7 தலைவர்கள் சென்னைக்கு வந்தபோதே மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான பிரசாரங்கள் தொடங்கியது. மத்திய பா.ஜ.க. ஆட்சியை ஒழிக்க வேண்டுமென்றால் நாம் அனைவரும் ஒன்றுசேர வேண்டும். எல்லா இயக்கங்களும் விட்டுக்கொடுத்து ஒத்து வரவேண்டும். 

இந்தியா கூட்டணியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் நாட்டிற்கு நன்மையளிக்கக் கூடிய வகையில் இருக்கும். பாராளுமன்ற தேர்தல் பிரசார வியூகங்கள், யார், யார் எந்த இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்? என்பதை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எங்களுக்கு தெரிவிப்பார். அதன்படி நாங்கள் நடப்போம்" என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister uthayanithi stalin press meet in chennai nehru stadium


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->