கிரிக்கெட்டை போல அதிமுகவிலும் ஐ.பி.எல் நடத்தலாம் - அமைச்சர் உதயநிதி பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


கிரிக்கெட்டை போல அதிமுகவிலும் ஐ.பி.எல் நடத்தலாம் - அமைச்சர் உதயநிதி பரபரப்பு பேச்சு.!

கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி நடந்து முடிந்த  ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் அந்த தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வந்தார். அதன் படி அவர் ஈரோடு பி.பி.அக்ரகாரம் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் பேசியதாவது, "தி.மு.க. எப்போதும் மக்களுக்கான கட்சி. நான் அமைச்சராக பொறுப்பு ஏற்றதும், உடனே பிரதமரை புதுடெல்லிக்குச் சென்று பார்த்து  சுமார் அரை மணி நேரம் அவரிடம் பேசினேன்.

அந்த நேரத்தில் அவரிடம் நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தேன். ஆனால், அதேசமயம் மற்றொரு கட்சியை சேர்ந்த கோஷ்டி, அதாவது எடப்பாடி பழனிசாமி பஞ்சாயத்தை சரிசெய்ய பிரதமரை சென்று சந்தித்து பேசியுள்ளார்.  

அ.தி.மு.க. தேர்தலுக்கு தேர்தல் தான் வருவார்கள். ஆனால் தி.மு.க. எப்போதும் மக்களுக்காக களத்தில் போராடும் இயக்கம். தமிழர்களின் நலன் காக்கும் இயக்கம்.

கிரிக்கெட்டில் ஐ.பி.எல். நடத்துவது போல அ.தி.மு.க.வில் ஐ.பி.எல். நடத்தலாம். ஏனென்றால், அந்த அளவுக்கு ஈ.பி.எஸ்.அணி, ஓ.பி.எஸ்.அணி, சசிகலா அணி, டி.டி.வி. தினகரன் அணி, தீபா அணி, என்று பல அணிகள் உள்ளன" என்று பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister uthayanithi stalin speach in erode


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->