பா.ஜ.க.வின் கிளை கழகமாக அ.தி.மு.க. மாறிவிட்டது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


பா.ஜ.க.வின் கிளை கழகமாக அ.தி.மு.க. மாறிவிட்டது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!!

சமீபத்தில் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் தடையை நீக்கி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை தமிழக அரசின் வக்கீல்கள் மூலம் வாதாடி பெற்று தந்தமைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் புதுக்கோட்டையில் சிப்காட் அருகே நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- "தமிழகத்தில் ஜல்லிக்கட்டினை நடத்த விடாமல் ஒரு கும்பல் போராடியது.

ஆனால் தமிழர்களின் அடையாளம் ஜல்லிக்கட்டு என்பதற்கு நீங்கள் நடத்திய போராட்டம் தான் காரணம். தமிழகத்தில் பாசிச கட்சி புதிதாக அரசியலில் ஜல்லிக்கட்டை தொடங்கி உள்ளார்கள். அதை கூட அவர்களால் நேர்மையாக ஆடமுடியவில்லை. 

ஜல்லிக்கட்டை பொறுத்தவரை வாடிவாசல் வழியாக தான் காளைகள் வரும். ஆனால் பாசிச கட்சி புறவாசல் வழியாக தான் வருகின்றனர். அப்படி வருவதை தமிழக மக்கள் எப்போதும் அனுமதிக்க மாட்டார்கள். தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக போராடியதற்கு கிடைத்த வெற்றி இது. அ.தி.மு.க. ஆட்சியில் தான் ஜல்லிக்கட்டுக்கான தடை விதிக்கப்பட்டது.

அந்தத் தடையை நீக்க கோரி மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது அ.தி.மு.க. அரசு கொலைவெறி தாக்குதலை நடத்தியது. ஜெயலலிதா மறைவுக்கு பின் பா.ஜ.க. தமிழகத்தில் நுழைய முயற்சி செய்து வருகிறது. பா.ஜ.க.வின் கிளை கழகமாக அ.தி.மு.க. மாறிவிட்டது. மத்திய அரசின் அடக்குமுறையை கண்டு தி.மு.க. என்றும் பயந்தது கிடையாது. 

எத்தனை மோடி, எத்தனை அமித்ஷாக்கள் வந்தாலும் தமிழகத்தை ஒன்றும் செய்ய முடியாது. வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சி.பி.ஐ. தான் பா.ஜ.க.வின் தொண்டர் படை. இந்ததியாவில் கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு அமலாக்கத்துறை 121 அரசியல் தலைவர்களை விசாரித்துள்ளது. அதில், 115 பேர் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள். 

இதேபோன்று தான் அமைச்சர் செந்தில் பாலாஜியிடமும் 18 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், மோடியிடம் நெருக்கமாக உள்ள அதானியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தவில்லை. நாங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம், இ.டி.க்கும் பயப்படமாட்டோம். 

வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாசிச கூட்டணியை விரட்டியடிக்க வேண்டும். கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அடிமைகளை விரட்டியடித்தோம். வரும் பாராளுமன்ற தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை விரட்டியடிப்போம் என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister uthayanithi stalin speach in putukottai jallikattu function


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->