அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் செயலால், கனபொழுதில் திகைத்துப்போன அரசியல் வட்டாரங்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக மதுரையை உருவாக்க வேண்டும் என்ற குரல்கள் தற்போது மேலோங்கி இருக்கிறது. இதற்காக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தீர்மானம் நிறைவேற்றியதாகவும் தகவல் வெளியானது. அமைச்சர் செல்லூர் ராஜுவும் மதுரையை இரண்டாம் தலைநகராக மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். 

இந்நிலையில், தமிழகத்தின் இரண்டாவது தலைநகருக்கு திருச்சி தான் சரியான நகரம் என்றும், தமிழகத்தில் இரண்டாவது தலைநகராக திருச்சியை மாற்றம் செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார். 

இதனால் அமைச்சர்கள் வட்டாரத்திற்குள் பனிப்போர் எழுந்த நிலையில், நேற்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திருச்சி நீதிமன்ற சாலை ரவுண்டானா பகுதியில் இருக்கும் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றார். 

அங்கு, தான் கொண்டு வந்திருந்த துண்டால் எம்.ஜி.ஆரின் சிலையை சுத்தம் செய்து மாலையை அணிவித்தார். இந்த விஷயம் பெரும் வைரலாகவே, சிலையின் மீது தூசிகள் இருந்ததால், அதனை துடைத்தேன் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் விளக்கம் அளித்தார். 

முன்னதாக நேற்று தர்மபுரியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர், தமிழகத்தின் இரண்டாவது தலைநகர் என்பது அமைச்சர்களின் தனிப்பட்ட கருத்து என்றும், அரசின் முடிவு கிடையாது என்றும் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Vellamandi Nadarajan MGR Trichy Statue Issue


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->