"ஆண்கள் வலிமையாக இருப்பது இதற்கு தான்" முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை.!  - Seithipunal
Seithipunal


சமீபத்தில் தனது பெண் தோழியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு சதீஷ் என்ற இளைஞர் கொலை செய்தார். இதில் கொலை செய்யப்பட்ட சத்யா என்ற பெண்ணின் தந்தையும் அதிர்ச்சியில் விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்டார். 

கணவர் மற்றும் மகளை இழந்து வாடும் அந்த தாயின் துயரத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. இப்படிப்பட்ட சூழலில், இது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது, "சத்யாவின் மரணத்தை நினைத்து நொறுங்கிப் போய் இருக்கிறேன்.

நான் மட்டுமல்ல இந்த செய்தியை அறிந்து கொண்ட அனைவருமே மிகுந்த துக்கத்தில் தான் இருப்பார்கள். தமிழகத்தில் இனி இது போன்ற துயரங்கள் நிகழக் கூடாது. எந்த பெண்ணுக்கும் இது நடக்காத வகையில் தடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. 

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சமூக நோக்கம் கொண்ட மனப்பான்மையுடன் பிள்ளைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. 

ஆண்கள் வலிமையுடன் இருப்பது பெண்களை பாதுகாக்கவும் மதிக்கவும் தான். இளைஞர்கள் என்ன மாதிரி வளர்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது." என்று வேதனை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin about parangi malai death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->