தியாகிகள் போராடிய நோக்கத்திற்காக உழைப்போம் - முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி.! - Seithipunal
Seithipunal


இன்று இந்தியாவின் 78-வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று காலை சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 

அப்போது அவர் பேசியதாவது: " நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது விடுதலை நாள் நல்வாழ்த்துக்கள். சுமார் 300 ஆண்டு கால போராட்டத்திற்கு பின்னர் கிடைத்த சுதந்திரம் இது.

* விடுதலையை பெற்று கொடுத்த தியாகிகளை போற்றுவோம். தியாகிகள் போராடிய நோக்கத்திற்காக உழைப்போம் என சுதந்திர நாளில் உறுதியேற்போம். நேதாஜி படை நடத்தியபோது கரம் கோர்த்தவர்கள் தமிழர்கள்.

* அறவழியில் போராய காந்தியின் பின்னால் கரம் கோர்த்து நின்றது தமிழ்நாடு. நாட்டின் பன்முக தன்மையின் அடையாளம் தேசிய கொடி. விடுதலை நாளில் மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்தவர் கலைஞர் கருணாநிதி" என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin speech in independence day function


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->