பிரக்ஞானந்தாவின் சாதனைகள் தேசத்திற்கே பெருமை - முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்.! - Seithipunal
Seithipunal


பிரக்ஞானந்தாவின் சாதனைகள் தேசத்திற்கே பெருமை - முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்.!

அஜர்பைஜானின் தலைநகர் பாகுவில் பிடே உலகக்கோப்பை செஸ் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில்  இந்திய 'இளம் புயல்' தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், 'நம்பர் ஒன்' வீரரும், ஐந்து முறை உலக சாம்பியன் வென்றவருமான மாக்னஸ் கார்ல்செனும் பலப்பரீட்சை நடத்தினர். 

இதில், கார்ல்சென் வெற்றி பெற்றார். பிரக்ஞானந்தா இரண்டாவது இடம் பிடித்தார். இளம் வயதிலேயே மிகச் சிறப்பாக விளையாடி 2-வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு தலைவர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். அதன் படி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்ததுடன், வீடியோ கால் மூலம் பேசி பாராட்டினார். 

இதையடுத்து, சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரக்ஞானந்தாவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வரவேற்பதற்காக விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா உள்ளிட்ட அதிகாரிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வீரர்கள், தனியார் பள்ளி மாணவர்கள் என்று ஏராளமானோர் வருகை புரிந்திருந்தனர்.

மேலும், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய கலைகள் மூலம் பிரக்ஞானந்தாவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் நேற்று தனது தாயுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:- "செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். பிரக்ஞானந்தாவின் சாதனைகள் தமிழ்நாட்டிற்கு மட்டுமில்லை, தேசத்திற்கே பெருமை. 

பிரக்ஞானந்தாவுக்கு நினைவுப்பரிசும். ரூ.30 லட்சம் ஊக்கத்தொகையும் வழங்கி சிறப்பித்தேன். வேகத்தைத் தொடருங்கள், மேலும் வரவிருக்கும் சவால்களிலும் வெற்றி பெறுங்கள், பிராக்ஞானந்தா! என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin tweet about chess player pragnanada


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->