மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா..புதுச்சேரி திமுகவினர் இரத்ததானம் வழங்கி உற்சாக கொண்டாட்டம்!  - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டுபுதுச்சேரி மாநில திமுக சார்பில் நடைபெற்ற  இரத்ததான முகாமில் ஏராளமான இளைஞர்கள் இரத்ததானம் அளித்தனர்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவர்களின் 72–வது பிறந்த நாள் விழாவை, புதுச்சேரி மாநில திமுக சார்பில் ஒரு மாதம் முழுவதும் மாநிலம் முழுக்க ஏழை, எளியோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பொதுக்கூட்டங்கள் நடத்துவது, கவியரங்கம், பட்டிமன்றம், பேச்சுப்போட்டி, விளையாட்டு போட்டிகள், மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது என்று மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில், முதல் நிகழ்ச்சியாக புதுச்சேரி மாநில திமுக சார்பில், இரத்ததான முகாம் இன்று நடத்தப்பட்டது. சித்தன்குடி ஜெயராம் திருமண நிலையத்தில் நடைபெற்ற இரத்ததான முகாமை மாநில அமைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் துவக்கி வைத்தார்.

முகாமில் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் என ஏராளமானோர் இரத்ததானம் வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு, அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எ. சம்பத், எம்.எல்.ஏ., மாநில துணை அமைப்பாளர்கள் ஏ.கே.குமார், அ. தைரியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா. சரவணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சண். குமரவேல், கே.எம்.பி. லோகையன், ஜே.வி.எஸ். ஆறுமுகம், டி. அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் சி. கோபால், வே. கார்த்திகேயன், வெ. ராமசாமி, ப. செல்வநாதன், பா. செ. சக்திவேல்,உள்பட ஏராளமான திமுக நிர்வாகிகள் ,தொண்டர்கள் கலந்துகொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MK Stalin's Birthday DMK donates blood in Puducherry


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->