#BREAKING || இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட இமாச்சலுக்கு ₹10 கோடி நிதியுதவி.!! முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு.!!
MKStalin announced rs10crore financial assistance to Himachal Pradesh
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு பல்வேறு தரப்பட்ட மக்களும், மத்திய அரசும் உதவி கரம் நீட்டி வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 10 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக கடும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்தின் நிவாரண பணிகளுக்காக 10 கோடி ரூபாய் வழங்கி அம்மாநில முதல்வர் சுப்வீந்தர் சிங் அவர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
இன்று காலை இமாச்சலப் பிரதேசம் முதல்வரை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்ட தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பேரிடரால் பாதிக்கப்பட்ட சேதங்கள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து விவரங்களை கேட்டு அறிந்தார். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இமாச்சல் பிரதேசம் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் நிகழ்ந்த இயற்கை பேரிடர் காரணமாக அம்மாநில மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் ஏற்பட்ட கடும் சேதங்கள் தன்னை மிகவும் வருத்தத்திற்கும் வேதனைக்கும் ஆளாக்கி உள்ளது.
மிகவும் நெருக்கடியான இந்த சூழ்நிலையில் மீட்பு மற்றும் நிவாரப் பணிகளை திறமையாக மேற்கொண்டு வருவதற்காக இமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சர் அவர்களை பாராட்டுகிறேன். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவார பணிகளுக்காக தமிழ்நாடு அரசின் பங்களிப்பாக இமாச்சலப் பிரதேச அரசுக்கு ரூபாய் 10 கோடி நிவாரணத் தொகையாக வழங்கியுள்ளேன்.
பாதிக்கப்பட்டுள்ள இமாச்சலப் பிரதேசத்திற்கு உதவுவதற்காக தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு மக்களும் எப்போதும் தயாராக இருக்கின்றனர். ஏதேனும் உதவி செய்யப்பட்டால் தன்னை தொடர்வது கொள்ள தயங்க வேண்டாம் என அந்த கடிதத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
MKStalin announced rs10crore financial assistance to Himachal Pradesh