தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை தேவை.!! மு.க ஸ்டாலின் அவசர கடிதம்.!! - Seithipunal
Seithipunal


இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற தமிழக மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய வெளியுறவு துறை அமைச்சர் அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடிக்க செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் அடிக்கடி கைது செய்யப்படுவது மிகுந்த கவலை அளிக்கிறது. இன்று IND-TN-06-MM-948 பதிவு எண் கொண்ட படகில் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையினால் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு மட்டும் இதுவரை 93 மீனவர்கள் கைது செய்யப்பட்டு 13 படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 நாட்களில் மட்டும் 3 வெவ்வேறு சம்பவங்களில் 34 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது.

பாரம்பரிய மீன்பிடி பகுதிகள் பல தலைமுறையாக மீனவர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் தேவையை பூர்த்தி செய்வதோடு அவர்களுக்கான வாழ்வாதாரத்தையும் வழங்கி வருகிறது. இலங்கை கடற்படையினால் மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் மீனவ மக்களுக்கு பெரும் துன்பத்தையும் துயரத்தையும் அளிக்கிறது.

இலங்கை சிறையில் வாடும் 19 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்து, அவர்களை தாயகம் அழைத்து வர தேவையான தூதர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பல்லாயிரக்கணக்கான மீனவ குடும்பங்களை பாதிக்கும் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வினை காண வேண்டும். மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களின் தலையிடும் ஆதரவும் இந்த பிரச்சினையை விரைவாக தீர்த்து, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினருக்கும் பெரும் நிம்மதியை தரும் என நம்புகிறேன்" என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MKStalin letter requiring action to rescue TN fishermen


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->