ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு.!! முதல்வர் மு.க ஸ்டாலின் ஆணை!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்த்தி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கடந்த ஆண்டு 05.11.2022 முதல் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35 ஆகவும் எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.44 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் இடுபொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவினம் ஆகியவை அதிகரித்துள்ளதால் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கை அரசால் கனிவுடன் பரிசளிக்கப்பட்டு இடுப்பொருட்களின் விலை உயர்வை ஈடு செய்திடவும், பால் உற்பத்தியை உயர்த்தி கூட்டுறவு நிறுவனமான ஆவினுக்கு வழங்கிட வழி வகுத்திடவும் ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் ஊக்கத்தொகையாக ஆவின் நிறுவனத்தால் 18.12.2023 முதல் வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டு உள்ளார்.

இதனால் பசும்ஸபால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 33லிருந்து 38 ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 44ல் இருந்து 47 ஆகவும் உயரும். இதன் மூலம் சுமார் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MKStalin order purchase price of milk has been increased by Rs3


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->