தமிழ்நாட்டில் "புதிதாக 4 மாநகராட்சிகள்".. மு.க ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் 4 புதிய மாநகராட்சிகளை உருவாக்கும் பணிகளை துவங்குமாறு முதலமைச்சர் மு‌க ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.  திமுக ஆட்சி பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் 28 புதிய நகராட்சிகள் மற்றும் 6 மாநகராட்சிகளும் புதிதாக உருவாக்கப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

தற்போது புதுக்கோட்டை நாமக்கல் திருவண்ணாமலை காரைக்குடி ஆகிய நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த தேவையான பணிகளை முன்னெடுக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி புதுக்கோட்டை நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சியை உருவாக்கவும், திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையில் உள்ள பகுதிகளை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி உருவாக்கவும், நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி உருவாக்கிடவும், காரைக்குடி நகராட்சி மற்றும் 2 பேரூராட்சிகள், 5 ஊராட்சிகளில் ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி உருவாக்கிடவும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MKStalin ordered 4 corporation in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->