தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் பருவமழை!...அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து, இந்த அருவிக்கு நீர்வரத்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும். தேனி கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைந்ததையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கும்பக்கரை அருவியின் பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரான பிறகு  அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல், தேனி மாவட்டம்  கம்பம் அருகே உள்ள சுருளி அருவி பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும், புண்ணிய தலமாகவும் விளங்கி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக சுருளி அருவியின் பகுதி மற்றும் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் இந்த பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதையடுத்து  நேற்று காலை சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால்,  பாதுகாப்பு கருதி, அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Monsoon rains in tamil nadu tourists are banned from bathing in the waterfalls


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->