5க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! - Seithipunal
Seithipunal


சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில்  சக மாணவன் ஒருவன்  5க்கும் மேற்பட்ட மாணவிகளை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை செய்து வந்துள்ளான்.

சென்னை ராயப்பேட்டை பகுதியில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்கிடையே கடந்த வாரம் அந்த பள்ளியில் படித்து வரும் மாணவியின் பெற்றோர் ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளனர்

அந்த புகாரில், எங்கள் மகள் ராயப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். படூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு மாணவி சென்றுள்ளார். அவருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த உறவினர்கள் மாணவியை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று பார்த்த போது, மாணவி கர்ப்பமாக இருந்தது தெரியவந்ததுள்ளது. 

உறவினர்கள் அதை கேட்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே மாணவியிடம் விசாரித்த போது, தன்னுடன் படிக்கும் மாணவன் ஒருவர், ஐஸ் அவுஸ் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று தனிமையில் இருந்ததாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து தனது மகளை கர்ப்பமாக்கிய மாணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் னைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

மகளிர் காவல் நிலைய போலீசார் அந்த புகாரின் படி, மாணவியை கர்ப்பமாக்கிய மாணவனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, மாணவன் தன்னுடன் படிக்கும் சக மாணவியை காதலிப்பதாக கூறி கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று வந்ததும், பிறகு மாணவியுடன் தனிமையில் இருந்ததும் தெரியவந்தது. 

மாணவனிடம் செல்போனில் உள்ள வீடியோக்களை காட்டி போலீசார் விசாரணை நடத்திய போது, 10ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே சக மாணவிகளை தனியாக அழைத்து சென்று மாணவன் ஒன்றாக இருந்தது தெரியவந்தது. 

இதில், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 17 வயதுக்கு குறைவானவர்கள் என்பதால், மாணவனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் குறித்து கடந்த 4 நாட்களுக்கு மேலாக மகளிர் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் ராயப்பேட்டை பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

More than 5 government school girls were sexually harassed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->