55,000 பணியிடங்கள் காலி! தள்ளாடும் மின்சார வாரியம்!!
More than 55000 vacancies in TNEB
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தொழில்நுட்பம், தணிக்கை, செயலாக்கம், நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உதவி பொறியாளர்கள், கணக்கீட்டாளர்கள் உள்ளிட்ட பதவிகளில் சுமார் 1.44 லட்சம் பணியிடங்கள் உள்ளது. இவற்றில் இந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி 88, 774 பேர் மட்டுமே பணிபுரிந்து வரும் நிலையில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 55,295 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சுமார் 2001 பேர் ஓய்வு பெற்றுள்ளனர்.
இந்த காலிப்பணியிடங்கள் அதிகரிப்பால் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாடு மின்சார வாரியம் தள்ளாடுகிறது. காலி பணியிடங்கள் நிரப்பப்படாததால் தற்போது உள்ள மின்வாரிய பணியாளர்கள் மீது பணி சுமை அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என மின்வாரிய ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். முதற்கட்டமாக 5000 ஊழியர்களை ஒப்பந்த ஊழியர்களாக நியமிக்காமல் நிரந்தர ஊழியர்களாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
English Summary
More than 55000 vacancies in TNEB