திண்டுக்கல் அருகே பரபரப்பு...! வீடு புகுந்து தாய்-மகள் வெட்டி கொலை...! மர்ம கும்பலின் வெறிச்செயல்...! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் வீடு புகுந்து மர்மகும்பல் தாய்-மகளை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கள்ளிப்பட்டி அம்பேத்கர் காலனி பகுதியில் வசித்து வருபவர் அய்யனார். இவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களது மகள் ராசாத்தி. இவருக்கு திருமணமாகி லட்சுமணன் என்ற கணவர் உள்ளார். இந்நிலையில் இவர்கள் அனைவரும் அருகில் உள்ள இரும்பு ஆலையில் வேலை பார்த்து, ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.

இதையடுத்து இவர்கள் வேலை முடிந்து வீட்டில் இருந்தபோது திடீரென மர்மகும்பல் ஒன்று ஆயுதங்களுடன் அத்துமீறி வீட்டுக்குள் புகுந்த தாய் மற்றும் மகளை சரமாரியாக வெட்டியுள்ளனர். மேலும் இதை தடுக்க வந்த லட்சுமணனையும் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த தாயும், மகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். மேலும் லட்சுமணன் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தாய் மற்றும் மகளை வெட்டி கொன்ற மர்ம கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother and daughter were hacked to murder in Dindigul


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->