மீண்டும் நாய் கடி! இதுக்கு ஒரு முடிவே இல்லையே! நாய் கடித்து தாய் மகள் படுகாயம்! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே  தெருநாய் கடித்ததில் தாய் மற்றும் மகளுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து நாய்கடி சம்பவங்கள் நடைபெற்று வருவது வேதனைக்குரிய உண்மை. கடந்த இரண்டு மாதங்களாகவே தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாய்கள் பல பேரை கடித்துள்ளது.

இந்தநிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆவலப்பள்ளி பகுதியில் உள்ள பாரத் நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவர் கம்பி கட்டும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜோதி இவர்களுக்கு நான்கு வயதில் இரட்டை பெண் குழந்தை உள்ளனர்.

இதில் மூத்த மகளான தன்யா ஸ்ரீ என்ற சிறுமி நேற்று வீதியில் விளையாட்டு கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று குழந்தை தன்யாவை துரத்தி துரத்தி கடித்துள்ளது. குழந்தையின் அலறல் சத்தத்தை கேட்டு அவரது தாய் ஜோதி நாயிடமிருந்து குழந்தையை காப்பாற்ற போராடினார் அவரையும் கடித்து உள்ளது.

தெரு நாய் கடித்ததில் தாய் மகள் என இரண்டு பேருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கே இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஓசூர் மாநகர பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை மற்றும் அட்டகாசம் அதிக அளவில் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். தெருவில் விளையாடும் குழந்தைகள், தெருவில் நடந்து செல்வோர் என பொதுமக்களைநாள்தோறும் துரத்துகிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mother and daughter were seriously injured after being bitten by a dog


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->