#BREAKING || ஈரோட்டில் பெய்த கனமழையால் மேற்கூரை இடிந்து விழுந்து தாய்-மகன் பலி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தாய் மற்றும் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெரிய அக்ரஹாரம் பகுதியில் 34 வயதாகும் சாரம்மா தனது 12 வயது மகன் அஸ்மத் உடன் வசித்து வந்த நிலையில் இன்று அதிகாலை உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து உள்ளது.

இந்த சம்பவத்தில் சாரம்மா மற்றும் அவருடைய மகன் அஸ்மத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கருங்கல்பாளையம் காவல்துறையினர் தீயணைப்பு துறையின் உதவியுடன் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்குறை இடிந்து விழுந்து தாய் மற்றும் மகன் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தமிழக முழுவதும் பழைய கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mother and son died roof collapsed due to heavy rain in Erode


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->