கன்னியாகுமரி || கல் உப்பில் மகளை முட்டி போட வைத்த தாய் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் சுனிதா மகள் அமர்சியா. இவர் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரை கடந்த புதன்கிழமை இரவு, மர்ம கும்பல் கடத்தி சென்றதாக தாயார் சுனிதா காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

அந்தப் புகாரின் படி போலீசார் தாய் சுனிதாவிடம் விசாரணை நடத்தியதில், தனது மகள் ஒருவரை காதலிப்பதாகவும், மகளைக் கடத்தியது அந்த பையனாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

அதன் படி போலீசார் விசாரணை நடத்தியதில், அமர்சியாவின் காதலன் அதே பகுதியை சேர்ந்த டேனியல் ஆகாஷ் என்பது தெரியவந்தது. உடனே போலீசார் ஆகாஷின் வீட்டிற்கு சென்றபோது அங்கு அமர்சியா இருந்துள்ளார்.
இதையடுத்து போலீசார் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது அமர்சியா கூறியதாவது:-

"நான் ஆகாஷ் என்பவரை காதலிக்கிறேன். இதில் தனது தாயாருக்கு விருப்பம் இல்லை. அதனால் என்னை அறையில் அடைத்து வைத்து அடித்து, கல் உப்பை பரப்பி அதில் என்னை முட்டிப் போட வைத்து நடக்க செல்லி கொடுமைப்படுத்தினார். 

அதைப் பற்றி நான் எனது காதலனிடம் கூறினேன். பின்னர் ஆகாஷின் வீட்டிற்கு சென்றுவிட்டேன். இதுகுறித்து எனது வீட்டிற்கும் தகவல் தெரிவித்தேன்" என்று அவர் தெரிவித்தார்.

இதைக்கேட்ட போலீசார் அமர்சியா மேஜர் என்பதால் அவர் விருப்பப்படி காதலனுடன் செல்ல அனுமதி அளித்து, விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு அறிவுரை கூறி இருவரையும் அனுப்பி வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mother punishment to daughter in kanniyakumari


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->