கைக்குழந்தையுடன் தற்கொலை செய்த தாய் - சிவகங்கையில் சோகம்.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள, திருப்புவனம் அருகே வலையப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகன்- அழகு மீனா தம்பதியினர். இவர்களுக்கு வேதாஸ்ரீ என்ற 6 மாத பெண் குழந்தை இருந்தது.

இந்த நிலையில், குழந்தை வேதாஸ்ரீ கடந்த நான்கு நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அழுது கொண்டே இருந்துள்ளது. மருத்துவரிடம் காண்பித்தும் தொடர்ந்து குழந்தை அழுது கொண்டே இருந்தது. இதையடுத்து அழகுமீனா நேற்று அதிகாலை 3 மணியளவில் குழந்தையுடன் வீட்டின் அருகில் உள்ள கண்மாய் பகுதிக்கு சென்றார். 

அங்கு அழகுமீனா தன் மீதும், குழந்தை மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். தீ உடல் முழுவதும் பரவியதையடுத்து குழந்தையும், அவரும் வலியால் அலறி துடித்தனர். இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி சென்று இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை வேதாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், அழகு மீனா மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் திருப்புவனம் பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mother sucide with baby in sivakangai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->