நம் மொழியை பாதுகாக்க வேண்டிய கடமை நம்மிடம் உள்ளது - எம்.பி கனிமொழி.!
mp kanimozhi speech about hindi language
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று, மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
"பெண்களை படிக்கக்கூடாது, இந்த உலகத்தில் உன்னால் போட்டிபோட முடியாது என்று சொல்வார்கள். இதை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது. தற்போது பெண்கள் முன்னேற்றம் அடைந்ததற்கு நமது தலைவர்கள் கொண்டுவந்த திட்டங்கள் தான் காரணம்.
பெண்கல்வி இருந்தால் சமூகம் மாற்றமடையும். நம்முடைய மொழியை பாதுகாக்க வேண்டிய கடமை நம்மிடம் உள்ளது. மும்மொழிக் கொள்கையை நம் மீது திணித்து கொண்டிருக்கிறார்கள். உங்கள் வீட்டு பிள்ளைகள் இந்தி படிக்கிறார்கள்.

எங்கள் வீட்டு பிள்ளைகள் யார் இந்தி படிக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நான் இந்தி படித்தது கிடையாது. நான் டெல்லியில் இருக்கும்போது இந்தி தெரியாததால் எனக்கு இதுவரை எந்த சிரமமும் ஏற்படவில்லை. இந்தி படித்தால் என்ன லாபம்? என்று தெரியவில்லை.
பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தமிழ் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஏனென்றால் அங்கிருந்து லட்சக்கணக்கான நபர்கள் வேலை தேடி தமிழகம் வருகிறார்கள். அவர்கள் தமிழ் தெரியாமல் கஷ்டப்படுகிறார்கள்.
தமிழ் படித்தவர்கள் உலகம் முழுவதும் பணிபுரிந்து வருகிறார்கள். மும்மொழி கொள்கை படிக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. பல்வேறு நாடுகளில் ஒன்று அல்லது இரண்டு மொழிகள் மட்டுமே கற்றுக்கொடுக்கிறார்கள். திமுக அரசு எந்த தடையும் பெண்களுக்கு இருக்கக்கூடாது என்று பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது" என்றுத் தெரிவித்தார்.
English Summary
mp kanimozhi speech about hindi language