புதுக்கோட்டை : காவேரி கூக்குரலின் "உணவுக் காடு மற்றும் முக்கனித் திருவிழா" - எம். எம். அப்துல்லா எம். பி. தொடங்கி வைத்தார்! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை திருவரங்குளத்தில் உள்ள புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் இன்று (ஜூன் 23) காவேரி கூக்குரல் இயக்கத்தின்  "உணவுக் காடு வளர்ப்பு மற்றும் முக்கனித் திருவிழா" நடைபெற்றது. மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த  விழாவை புதுக்கோட்டை ராஜ்யசபா எம் பி. திரு. எம். எம். அப்துல்லா அவர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இவ்விழா குறித்து காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் தெரிவிக்கையில், "பருவ நிலை மாற்றம் காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.

மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளின் விளைச்சலும் இந்த ஆண்டு கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. எனவே நமது பாரம்பரிய முறைப்படி பல அடுக்குகளில் பல வகையான பயிர்களை வளர்க்கும் உணவுக் காடு மூலமாக பருவநிலை  மாற்றத்தை கட்டுக்குள் கொண்டு வரவும், மண்ணில் நுண்ணுயிர்களை மேலும் பெருக்கவும் முடியும் என்பதை வலியுறுத்தவே இந்த விழா நடத்தப் பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் எம். பி. அப்துல்லா பேசுகையில், "பாரம்பரியத்தோடு விஞ்ஞானத்தையும் புகுத்தி சமநிலையோடு விவசாயத்தை அணுகும் புரிதல் இருந்தால் காடுகளை மீட்டெடுப்பது சாத்தியம். இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கும் காவிரி கூக்குரல் அமைப்பினருக்கு வாழ்த்துக்கள்" என்று பேசினார்.

இவ்விழாவில் 300 வகை மாம்பழங்கள், 100 வகை பலா மற்றும் வாழை ரகங்கள் கண்காட்சியாகவும், விற்பனைக்கும் வைக்கப் பட்டிருந்தன. மேலும் இந்த கனிகளில் தயாரிக்கப்பட்ட பொருட்களும் விற்பனைக்கு இடம் பெற்றிருந்தன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MP M M Abdullah Started Cauvery Kukurals Food Forest Cultivation and Mukkani Festival


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->