கடலில் காணாமல் போன குமரி மீனவர் - மத்திய அரசுக்கு விஜய் வசந்த் எம்.பி கடிதம்.! - Seithipunal
Seithipunal


கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவா கடற்பகுதியில் இந்திய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல், மீனவர்கள் படகின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், மீன்பிடித்து கொண்டிருந்த 13 மீனவர்களில் 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணியில், மாயமான கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவரை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:-

"கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தபோது படகு கவிழ்ந்து கடலில் காணாமல் போன கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில்பாடு பகுதியை சேர்ந்த ஜெனிஸ்மோன் என்ற மீனவ சகோதரரை மீட்க கோரி இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் இந்திய கப்பற்படை உயரதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

கப்பற்படை அதிகாரிகளை தொடர்பு கொண்டு மீனவர்களை மீட்க ஆவன செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளேன். ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலுடன் ஏற்பட்ட விபத்தில் படகு கவிழ்ந்து மீன்பிடி படத்திற்குள் இருந்த இரண்டு மீனவர்களை காப்பாற்ற முடியாமல் போனது. இவர்கள் படகுக்குள் சிக்கி மூழ்கி இருப்பார்கள் என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்திய கப்பற்படையின் பயிற்சி பெற்ற வீரர்களால் இவர்களை கடலின் அடி தளத்திற்கு சென்று தேட முடியும். ஆகவே இந்திய கப்பற்படை சிறப்பு வீரர்களை இதற்காக அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mp vijay vasanth write letter to central govt for kumari fisherman missing


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->