மழை காரணமாக ரெயில் பாதையில் மண்சரிவு- ஊட்டி மலை ரெயில் நாளை வரை ரத்து!
Mudslide on railway track due to rain Ooty Hill train canceled till tomorrow
நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, குன்னூர், பர்லியாறு மற்றும் கோவை மாவட்டத்தின் கல்லாறு, மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதனால் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் பாதையில் கல்லாறு மற்றும் ஹில்குரோவ் ரெயில் நிலையங்களுக்கிடையே ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டது. மண் சரிவினால் பாறாங்கற்கள் தண்டவாளத்தில் விழுந்து பாதையை மூடியது, மேலும் மரங்கள் வேரோடு சாய்ந்து தண்டவாளத்தின் குறுக்கே விழுந்தன.
இந்த பாதகமான நிலைமையின் காரணமாக, மலைரெயில் சேவையை சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், இன்று (திங்கட்கிழமை) மற்றும் நாளை (செவ்வாய்க்கிழமை) மலைரெயில் சேவை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலைரெயில், இந்த பாதிப்பால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இது சுற்றுலா பயணிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் ரெயில்வே தொழிலாளர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். சீரமைப்பு பணி முடிவடைந்ததும், மலைரெயில் சேவை மீண்டும் வழக்கம்போல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Mudslide on railway track due to rain Ooty Hill train canceled till tomorrow