இது மட்டுமல்ல! இன்னும் 13 நாடுகளில் சிம்பொனி நிகழ்ச்சி நடத்த ஒப்பந்தம் செய்துள்ளேன்...! - இசைஞானி இளையராஜா - Seithipunal
Seithipunal


லண்டனில் நடைபெற்ற சிம்பொனி இசை நிகழ்ச்சியில் இருந்து இசைஞானி இளையராஜா இன்று சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் தமிழ்நாட்டு மக்களால் உற்சாக உற்வேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு, இளையராஜாவை வாழ்த்துக்களுடன்  வரவேற்றார்.இதன்பிறகு செய்தியாளர்களை இசைஞானி இளையராஜா சந்தித்து பேசினார்.

இசைஞானி இளையராஜா:

அதில் அவர் கூறியதாவது," அனைவருக்கும் நன்றி. மிகவும் மகிழ்வான இதயத்தோடு மலர்ந்த முகத்தோடு நீங்கள் என்னை வழியனுப்பி வைத்ததே, இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த இறைவன் அருள்புரிந்தார்.

இது ஒரு சாதாரண விஷயம் அல்ல. எனது சிம்பொனி இசையை மூச்சுவிட மறந்து ரசிகர்கள் ரசித்தனர்.ரசிகர்களின் வாழ்த்தே இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிம்பொனி நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த முடிந்தது. மேலும் தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டதை எண்ணி பெருமைப்படுகிறேன்.

இதைத்தொடர்ந்து இன்னும் 13 நாடுகளில் சிம்பொனி நிகழ்ச்சி நடத்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. லண்டன் சிம்பொனி இசை நிகழ்ச்சியை டவுன்லோடு செய்து கேட்காதீர்கள்" எனத் தெரிவித்தார்.மேலும் இது குறித்த செய்திகள் மற்றும் விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Musician Ilayaraja have signed a contract to conduct symphony concerts in 13 more countries


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->