நர்சை கொன்று நகைகளை கொள்ளை அடித்த மர்ம ஆசாமிகள்.! போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் நர்சை கொன்றுவிட்டு நகைகளை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ராதா (70). இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இவர்களது மகன் ரஜினி (45) திருச்சி மாநகராட்சியில் பில் கலெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் ரஜினியின் மனைவியின் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனைவியை பார்ப்பதற்காக ரஜினியும் சென்றுள்ளார். இதையடுத்து வீட்டில் ராதா மட்டும் தனியாக இருந்த நிலையில், நேற்று ராதாவிடம் பேசுவதற்காக ரஜினி ஃபோன் செய்துள்ளார்.

ஆனால் தாயார் போன் எடுக்கவில்லை என்பதால், ரஜினி பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கு போன் செய்து இது பற்றி கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து பக்கத்து வீட்டை சேர்ந்த கார்த்திக் என்பவர் ரஜினியின் வீட்டின் கதவை தட்டி பார்த்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த கார்த்திக் ரஜினிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து விருதுநகரில் இருந்து வந்த ரஜினி வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது, தாய் ராதா பிணமாக கிடந்துள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த இரண்டு பவுன் செயின், ஒரு பவுன் கம்மல் இரண்டு பவுன் வளையல் ஆகியவை திருடு போயிருந்தது.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து போலீசார், மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராதாவை கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளை அடித்த மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mysterious persons who murder the nurse and robbed the jewels in Trichy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->