#தமிழகம் || ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் திடீரென மாயம்.! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்.!
namakkal 7 family members missing
நாமக்கல் மாவட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் திடீரென காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அடுத்துள்ள கொக்கராயன் பேட்டை ஆலங்காடு பகுதியை சேர்ந்தவர் நசீர் (32 வயது). இவருக்கு தாசின் என்ற 26 வயது மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு கிகனா (8 வயது மகள்), சையத் கலாம் (7 வயது மகன்), முகமது உசேன் (6 மாத குழந்தை உள்ளது.
தம்பதிகள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். இதனால் கணவருடன் கோபித்துக்கொண்டு தாசின் தனது தாய் வீட்டுக்கு அடிக்கடி செல்வதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது.
சம்பவத்தன்றும் இதேபோல் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் எப்போதும் போல தாசின் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி தாய் வீட்டிலிருந்து தாசின், குழந்தைகள் 3 பேர், தாய் ஷாகிதா பானு உள்ளிட்ட 7 பேரை திடீரென காணவில்லை.
அக்கம், பக்கத்தில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை என்பதால், இதுகுறித்து நசீர் குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் எங்கு சென்றார்கள்? குழந்தைகள் என்ன ஆனது? என்பது குறித்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
namakkal 7 family members missing