கள்ளக்குறிச்சி வந்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவர் கிஷோர் மக்வானா..! - Seithipunal
Seithipunal


இன்று (ஜூன் 26) புதன்கிழமை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவர் கிஷோர் மக்வானா, மற்றும் ஆணைய உறுப்பினர்கள் வட்டேபள்ளி ராம்சந்தர், லவ்குஷ் குமார் ஆகியோர் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில்  சந்தித்து விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த உயிரிழந்தோரின் குடும்பத்தினரிடம் பேசிய ஆணையத் தலைவர், அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளுக்கும் எங்கள் ஆணையம் பரிந்துரைக்கும் என்று உறுதி அளித்துள்ளார்.


இதையடுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்த குழுவினர், அங்கும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து அவர்களுக்கு வழங்கப்படும்  சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை நேரில் ஆய்வு செய்தனர். 

அதன் பின்னர் சிகிச்சையில் இருப்போரிடமும், அவர்களது குடும்பத்தினரிடமும் பேசிய ஆணையத் தலைவர் கிஷோர் மக்வானா , அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளார். இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர், காவல் கண்காணிப்பாளர்கள், மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆணையத் தலைவர், அங்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதில், இந்த சம்பவத்திற்கான காரணம், உயிரிழந்தவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள் விபரம், தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள், இந்த வழக்கில் கைது செய்யப் பட்டவர்கள் விபரம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

National commission of Scheduled Caste Chairman Inquired in Kallakurichi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->