திருப்பத்தூர்: தேசிய மயமாக்கப் பட்ட வங்கியில் அடகு வைக்கப் பட்ட நகைகளை வெட்டி எடுத்து மோசடி..!! - Seithipunal
Seithipunal



சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே பிள்ளையார் பட்டியில் செயல்பட்டு வரும் ஒரு தேசிய மயமாக்கப் பட்ட வங்கியில், வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளில் இருந்து தங்கத்தை வெட்டி எடுத்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து கடந்த ஏழு நாட்களாக அந்த வங்கியில் தங்கள் நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர்கள் பலரும் வந்து தங்கள் நகைகளை திருப்பி செல்கின்றனர். இதனால் அந்த வங்கிப் பகுதியில் கடந்த 7 நாட்களாக பரபரப்பாக உள்ளது. 

அப்படி நகைகளை திருப்பிச் செல்லும் வாடிக்கையாளர்களிலும் சிலருக்கு மோசடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அந்த வங்கிக்கு 10 நாட்களுக்கு முன்பு தான் புதிய மேலாளர் வந்து பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து பணத் தேவைக்காக வாடிக்கையாளர்கள் வங்கியில் அடகு வைத்த நகையை யார், எப்படி வங்கியின் பாதுகாப்பை மீறி நகைகளை வெட்டி எடுத்து மோசடி செய்து வருகின்றனர்? என்று கண்டுபிடிக்கும் படி மோசடியால் பாதிக்கப்பட்ட மக்கள் காவல் துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையடுத்து சிவகங்கை மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் அங்கு விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் வங்கியின் உயர்மட்டக் குழுவும் எத்தனை பேருக்கு இந்த மோசடி நடந்துள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். 

தேசிய மயமாக்கப் பட்ட வங்கியிலேயே இப்படி மோசடி நடந்திருப்பது பொதுமக்களுக்கு வங்கியின் மீது ஒரு நம்பிக்கையற்ற தன்மையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nationalized Bank in Tirupattur Got Defrauding in Pledged Jewelleries


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->