தங்கை திருமணத்தில் கலந்து கொள்ள கூடாது என்ற கணவன் - மனைவி தற்கொலை.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் அடுத்த மெய்யூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கும் செங்கல்பட்டை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணுக்கும் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், திவ்யாவின் தங்கைக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு கல்யாண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இதற்கிடையே ராஜ்குமார் தனது மனைவி திவ்யாவை தங்கையின் திருமணத்திற்கு செல்ல கூடாது என்று கட்டாயப்படுத்தி உள்ளார்.

இதனால், கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் நொந்து போன திவ்யா நேற்று முன்தினம் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். 

இதையடுத்து, வீட்டிலிருந்து புகை வருவதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து திவ்யாவை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, திவ்யாவின் தாய் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். 

அதன் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து திவ்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திவ்யா தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chengalpattu woman sucide for husband tell not participate in sister marriage


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->