சொகுசு விடுதியில் விபச்சார தொழில் நடத்திய பொறியியல் மாணவி கைது.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள எழும்பூரில் சொகுசு விடுதி ஒன்றில் இளம்பெண்களை அடைத்து வைத்து விபசாரம் நடத்தி வருவதாக விபசார தடுப்பு போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி, விபச்சார தடுப்பு போலீசார் சம்பந்தப்பட்ட  விடுதிக்குச் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

அதில், மூன்று இளம்பெண்களை அடைத்து வைத்து விபசார தொழில் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விபசார தொழிலில் ஈடுபட்ட  மூன்று பெண்களையும் மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். 

இதைத் தொடர்ந்து விபசார தொழில் நடத்தி வந்ததாக புதுச்சேரியைச் சேர்ந்த பெண் தரகர் ஜெயப்பிரதா மற்றும் அவர் காதலர் பிரேம்தாஸ் உள்ளிட்ட இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தது.

கைது செய்யப்பட்ட ஜெயப்பிரதா பிரபல பொறியியல் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக தனது காதலனோடு சேர்ந்து விபசார தொழில் செய்து வந்ததாகவும், பணச்செலவுக்காக அப்பாவி கல்லூரி மாணவிகள் பலரையும். விபசாரம் செய்ய வைத்துள்ளார் என்பதும் தெரிய வந்தது. 

அதன் பின்னர் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர். விடுதியில் கல்லூரி மாணவி ஒருவர் விபசார தொழில் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near chennai engineering student arrested for run Prostitution industry


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->