செங்கல்பட்டு அருகே திருட முயன்ற வடமாநில தொழிலாளியை அடித்து கொன்ற ஆறு பேர் கைது.!  - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாழம்பூர் அருகே காரணை நேரு தெருவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் சுவர் ஏறி குதித்துள்ளார். இவரைப் பார்த்து நாய்கள் குரைத்துள்ளது. 

இந்த சத்தத்தைக் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அந்த இடத்திற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது ஆண் நபர் ஒருவர் அங்குள்ள வீட்டுக்குள் நுழைய முயன்றுள்ளார்.

இதையடுத்து, அந்த இளைஞர்கள் அந்த நபரை பிடிக்கச் சென்ற போது, அந்த நபர் இளைஞர்களை திடீரென கற்களால் தாக்கியுள்ளார். இருப்பினும் அந்த இளைஞர்கள் அவரை மடக்கி பிடித்து கைகளை கட்டி சரமாரியாக கம்பி, கட்டை, கைகளால் பலமாக தாக்கியுள்ளனர்.

இதைப்பார்த்த பொதுமக்கள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 
 உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்த நபரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து போலீசார் அந்த நபர் குறித்து விசாரணை செய்ததில், அவர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த கேசட்ரா மோகன் பர்மன் என்பதும், தற்போது இவர் தாழம்பூரில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் தங்கி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. 

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மோகன் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்று உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து, வடமாநில தொழிலாளியை தாக்கியதாக காரணை நேரு தெருவை சேர்ந்த ஆறு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai six young mans arrested for kill north state youth


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->