காக்கி சட்டை அணியாத டிரைவருக்கு போலீஸ் வச்ச ஆப்பு.! இனிமே மறப்பீங்க.. - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள எண்ணூர் விரைவு சாலையில் மணலி சி.பி.சி.எல். சந்திப்பு வளைவு பகுதி அருகில் ஏராளமான கனரக வாகனங்கள் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, அந்த பகுதியில் போக்குவரத்து போலீஸ் தலைமைகாவலர் ஒருவர் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். 

அப்போது, லாரி டிரைவர் ஒருவர், காக்கி சட்டையும், லுங்கியும் அணிந்திருந்தார். அதைப்பார்த்த போலீஸ் தலைமை காவலர் அவரை அழைத்து, எதற்காக சீருடை அணியவில்லை என்று கேட்டு அவருக்கு ரூ.500 அபராதம் விதித்தார். அதற்கு லாரி டிரைவர் தற்போது என்னால் 500 ரூபாய் அபராதம் கட்ட இயலாது. இரவு முழுவதும் கண் விழித்து லாரி ஓட்டினால் மட்டும் தான் என்னால் 500 ரூபாய் சம்பாதிக்க முடியும். 

அதையும் அபராதமாக கட்டி விட்டால் நான் குடும்பம் நடத்த என்ன செய்வேன் என்று தலைமை காவலரிடம் கெஞ்சினார். அதற்கு அவர் விடாபிடியாக அபராதம் விதித்து நீ கட்டாவிட்டால் உன் லாரி உரிமையாளரை கட்ட சொல் என்று தெரிவித்துள்ளார். அதற்கு லாரி டிரைவர், வருத்தத்துடன் அவர் கட்டமாட்டார். எனது ஒருநாள் உழைப்பு வீணாகி விட்டதே என்று கண்ணீர் விட்டு புலம்பினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai trafic police finalty to lorry dirver


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->