போலீஸ் என்று கூறி கனடா சுற்றுலா பயணியிடம் பணம் பறித்த இருவர் கைது.!
near chennai two peoples arrested for money fraud incanada tourists
கனடா நாட்டைச் சேர்ந்தவர் ஸ்ரீதரதாஸ். இவர் சென்னை அருகே சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில், இவர் கடந்த மூன்றாம் தேதி பாண்டி பஜாரில் உள்ள வெளிநாட்டு பணம் மாற்றம் இடத்தில் தன்னிடம் இருந்த வெளிநாட்டு டாலரை கொடுத்து ரூ.1.10 லட்சம் பெற்றார்.
அப்போது, அங்கிருந்த அஜி ஷெரிப் என்பவர், ஸ்ரீ தரதாஸிடம் நானும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வருவேன் என்று பேசி அப்படியே அவரிடம் அறிமுகமாகி தங்கும் விடுதி வரை வந்துள்ளார்
அதே சமயத்தில் ஸ்ரீ தரதாஸின் அறைக்கு போலீஸ் என்று கூறி உள்ளே வந்த நபர், உங்கள் அறையில் போதைப் பொருள் இருப்பதாக தகவல் வந்தது. அதனால் சோதனை செய்ய வேண்டும் என்று கூறி சோதனையிட்டுள்ளார்.
இதையடுத்து, ஸ்ரீ தரதாஸிடம் இருந்த ரூ.1.10 லட்சம் ரொக்கத்தை அவர் பறிமுதல் செய்து அங்கிருந்து சென்றுள்ளார். அவர் சென்ற சில நிமிடங்களில் அறையில் இருந்த ஷெரிபும் அங்கிருந்து சென்றுள்ளார்.
இதனால், சந்தேகமடைந்த ஸ்ரீதரதாஸ் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சம்பவத்தில் ஈடுபட்ட கலியமூர்த்தி மற்றும் அஜி ஷெரிஃப் உள்ளிட்ட இருவரையும் கைது செய்தனர்.
அதன் பின்னர் இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் இருவரும் நண்பர்கள் என்பது தெரியவந்தது. இதற்கிடையே அவர்கள் இருவரும் திருடிய பணத்தில் 8 கிராம் தங்க நாணயம் வாங்கியுள்ளனர். போலீசார் அதையும் பறிமுதல் செய்தனர்.
English Summary
near chennai two peoples arrested for money fraud incanada tourists