விபத்தில் சிக்கிய உதவி ஆய்வாளரை பார்க்க சென்ற பெண் தலைமை காவலர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் ரமா பிரபா. இவர் நேற்று முன்தினம் பணியை முடித்து விட்டு வீட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். 

இவர் குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை அருகே சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த அவர்,  காவல்நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமைக் காவலர் ஷீலா ஜெபமணியை உதவிக்கு அழைத்துள்ளார். 

அதன் படி, புறப்பட்ட அவர் விபத்து நடைபெற்ற பகுதியின் அருகே செல்லும்போது, ஜெபமணியின் வாகனத்தின் மீது பின்னால் வந்த கார் மோதியுள்ளது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த ஜெபமணி, தலையில் பலத்த காயமடைந்து சுயநினைவு இல்லாமல், கிடந்துள்ளார். 

இதைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸை அழைத்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு, அவருக்கு தலையில் 7 தையல்கள் போட்டுள்ளனர். 

இருப்பினும், அவர் மயக்க நிலையிலேயே இருந்துள்ளார். நேரம் அதிகரிக்க அதிகரிக்க அவருடைய நிலைமை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். 

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

அந்த விசாரணையின் முடிவில், கார் ஓட்டுநர் பல்லாவரத்தைச் சேர்ந்த சக்தியை கைது செய்தனர். விபத்தில் சிக்கிய பெண் உதவி ஆய்வாளரைப் பார்க்க சென்ற பெண் தலைமை காவலர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் பரப்பரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai woman police died for bike accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->