மகளோடு இன்ஸ்டா ரீல்ஸ்.! கையும் காலுமாக சிக்கிய பெண் காவலர்.!  - Seithipunal
Seithipunal


சமீப காலமாகவே சமூக வலைத்தளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது. அதேபோல் பல இன்ஸ்டா ரீல்ஸ்களும்  வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளாகின்றன. 

அந்தவகையில், பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் காவல் சீருடையில் தனது மகளுடன் சேர்ந்து எலியிட்டுள்ள இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோவால் அவர் சிக்கலான   நிலைக்குத் தள்ளபட்டுள்ளார்.

சென்னையிலுள்ள திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் விஜயலட்சுமி. இவரின் மகள் சாரா தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிடும் பழக்கத்தை வழக்கமாக கொண்டவர். இவர் சமீபத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில் ''மம்மி இங்க கொஞ்சம் வாங்க... நான் லவ் பண்ணலாம்னு முடிவெடுத்திருக்கேன்'' என்று சாரா தெரிவித்துள்ளார். அதற்கு காவல் சீருடையில் இருக்கும் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி ''நடக்கிறத பாரு'' என்று பதிலளித்துள்ளார். 

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் ‘மை டாக்சிக் ஃபிரண்ட்’ என்ற பெயரில் பதிவேற்றப்பட்டுள்ளது.  இந்த வீடியோ உயர் அதிகாரிகள் கவனத்திற்குச் சென்றதனால் விஜயலட்சுமிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai woman police instagram reels


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->