மருத்துவமனையில் காணாமல் போன சிறுமி : இன்ஸ்டாகிராமில் கண்டுபிடித்த போலீசார்.! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே சூளமேட்டில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்த சிறுமி ஒருவர் உடல் நலக்குறைவின் காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது, மருத்துவமனையில் இருந்த சிறுமி திடீரென காணாமல் போனதால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், விடுதி ஊழியர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் அவரை தேடி வந்தனர்.

இதைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம்களில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடுவதில் ஆர்வம் கொண்ட அந்த பெண் ஏற்கனவே சமூக வலைதள வீடியோ மூலம் பிரபலமடைந்த மற்றொரு பெண்ணுடன் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

இந்த வீடியோவைக் கண்ட போலீசார் சென்னையில் உள்ள எண்ணூர் சுனாமி குடியிருப்பில் இருந்த அந்த பெண்ணை மீட்டனர். அந்த சிறுமியை மீட்ட காவல் துறையினர் விசாரணை செய்து, அறிவுரை கூறி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

மேலும், பெண்கள் காப்பகத்தில் இருப்பது அவருக்கு பிடிக்கவில்லை என்பதால் அவரது தந்தையிடம் அந்த சிறுமி பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai young girl missing in soolaimedu hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->