கோவை : சாலையில் ஒய்யார நடை போட்ட காட்டு யானை.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியதடாகம் வனப்பகுதியில் பதினைந்திற்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது ஊருக்குள் சென்று வரும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. 

இதனால், வனத்துறை சார்பில், "இந்த பகுதியில் யானை நடமாட்டம் இருப்பதால், இரவு நேரங்களில் பொதுமக்கள் அவசியமில்லாமல் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் நேற்று இரவு மருதமலை வனப்பகுதியில் இருந்து ஆண் யானை ஒன்று வனத்தை விட்டு வெளியேறி நேராக குடியிருப்பு பகுதிக்குள் சென்று, தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்தது. 

இதனை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த யானை அருகில் உள்ள வாழை தோட்டத்திற்குள் சென்றது. 

இதையறிந்த பொதுமக்கள் சம்பவம் தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி, வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். 

இந்நிலையில் இன்று காலை அதே யானை கணுவாய் மெயின் ரோட்டில் நடந்து வந்தது. யானை வருவதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, பயத்தில் அங்கிருந்த பொது மக்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்து ஓடினர். 

இதைத் தொடர்ந்து, அந்த யானை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சாலைகளில் வெகுநேரமாக சுற்றி திரிந்தது. இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

அந்த தகவலின் படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனை, அங்குள்ள சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது இது வைரலாகி வருகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near coimbatore elephant walk in road


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->