தான் வசித்த வீட்டை சட்டக்கல்லூரியாக உருவாக்கிய மாமனிதர் கலைஞர் - அமைச்சர் ஐ. பெரியசாமி பேச்சு.!  - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபல ஜி.டி. என் கல்லூரியில் சட்டக் கல்லூரி துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு ஜி.டி.என். கல்விக் குழும அறங்காவலரும் கம்பன் கழகத் தலைவருமான புதுக்கோட்டை ராமச்சந்திரன் தலைமை வகித்தும், ஜி.டி.என் கல்விக் குழுமத் தலைவர் ரத்தினம் வரவேற்புரையும் வழங்கினார். 

இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்துகொண்டு கல்லூரியைத் திறந்து வைத்தார். இதையடுத்து, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாணவர் சேர்க்கையைத் துவங்கி வைத்தார். பின்னர் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பாடநூல்களை மாணவ மாணவியருக்கு வழங்கினார்.

மேலும் இந்த விழாவில், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் சந்தோஷ் குமார், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, மாவட்ட ஆட்சியர் விசாகன், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், உள்ளிட்ட பல அதிகாரிகளும், மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்ததாவது, “நான் 2006 -2007 வரை இரண்டு ஆண்டுகள் சட்டத்துறை அமைச்சராக இருந்தபோது தான் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி கொண்டு வரப்பட்டது. இதற்காக திமுக தலைவர் கலைஞர் தான் வசிப்பதற்காக உருவாக்கிய வீட்டை அம்பேத்கர் சட்டக் கல்லூரியாக உருவாக்கிக் கொடுத்தார். 

இதையடுத்து, நான் மதுரையில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்து வந்த போது இரண்டாம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக வெளியேற்றப்பட்டேன். ஆனால் என்னுடைய ஒரே ஆசை, நான் சட்டம் படித்து நீதிபதியாக வர வேண்டும் என்பதுதான். அது நடைபெறமால், அரசியலுக்கு வந்து விட்டேன். ஆனால், நம் மாவட்டத்தைச் சேர்ந்த சோமசுந்தரம், வேல்முருகன், வேலுமணி, மஞ்சு உள்ளிட்டோர்  நீதிபதிகளாக இருந்து வருகிறார்கள்.

தற்போது, வக்கீல் படிப்புக்கு படிக்கக்கூடிய மாணவ மாணவிகள் யாரையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை. சட்டமே அவர்களுக்கு வாழ்வாதாரமாக அமையும். அந்த மாணவர்கள் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் அரைமணி நேரம் வாதாடினாலே போதும் 30 லட்சம் நேர்மையான வழியில் வரக்கூடிய வருமானமாக இருக்கும்.

அரசு சட்டக் கல்லூரியில் மாணவ மாணவிகள் சேர வேண்டும் என்றால் குறைந்தது 82% மார்க் இருந்தால் தான் போக முடியும். ஆனால் குறைந்த மார்க் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் இந்த ஜி.டி.என் சட்டக் கல்லூரி உதவியாக இருக்கும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near dindukal GTN law college open minister periyasamy speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->