கோவை || நகை பட்டறையில் கொள்ளையடித்த ஊழியர்.! போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சண்முக நகர் பகுதியில் தங்க நகைகள் செய்யக்கூடிய பட்டறைகள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றது. இந்த பகுதியில் மோகன் குமார் என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக நகை பட்டறை நடத்தி வருகிறார். 

இவருடைய பட்டறையில் நான்கு பேர் பணி செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு நகை பட்டறையில் வேலை முடிந்ததும் பட்டறையை பூட்டிவிட்டு அனைவரும் சென்றுள்ளனர். 

அப்போது, அந்த பட்டறையில் வேலைபார்த்த மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பிரமோத் என்பவர் பட்டறையை மூடும் போது பட்டறையின் ஜன்னலை சிறிது திறந்து வைத்து சென்றுள்ளார். அதன் பின்னர், யாரும் இல்லாத நேரத்தில் பட்டறைக்குள் புகுந்த பிரமோத், சுமார் 1,067 கிராம் எடை கொண்டு தங்க கட்டிகள் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து பட்டறையின் உரிமையாளர் மோகன் குமார், வெரைட்டிஹால் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் படி, வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near kovai employee robbed in jwellery workshop


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->