கிஷ்ணகிரியில் பரபரப்பு - நடுரோட்டில் இளைஞரை துடி துடிக்க கொன்ற மாமனார்.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளம் பெண்ணை காதலித்து வந்த ஒரு இளைஞர் பெண்வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில், அந்த வாலிபர் கே.ஆர்.பி. அணை அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது, பெண் வீட்டாரின் உறவினர்கள் அந்த இளைஞரை வழிமறைத்து நடுரோட்டில் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளனர். இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அந்த கும்பல் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றது. 

இதையடுத்து அவர்கள் சம்பவம் தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் போலீசார் நடுரோட்டில் இலைநகரைக் கொலை செய்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்களை தீவிரமாக தேடிவருகின்றனர். இதற்கிடையே  உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். 

இதையறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை களைந்து போக செய்துள்ளார். நடுரோட்டில் இளைஞர் ஒருவர் ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near krishnagiri young man kill for love marriage


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->