மதுரை : இரண்டு மாதமாக தொடர் சிகிச்சையில் இருந்து பொது தேர்வு எழுத வந்த மாணவி.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் அருகே ஓ.ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சரவணன்-தேவி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் உமாமகேஸ்வரி திருமங்கலம் அரசு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். 

இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருடைய கால்கள், இடது கை மற்றும் குறுக்கெலும்பு உள்ளிட்டவை உடைந்தது. இதனால், உமாமகேஸ்வரி கை, கால்களில் கட்டுபோடப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார். 

இந்த நிலையில் அவர் பொதுத்தேர்வை முன்னிட்டு சிகிச்சையில் இருக்கும்போதே தயாராகி வந்துள்ளார். இந்த ஆர்வத்தில் இருந்த உமா மகேஸ்வரிக்கு பள்ளி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்க முன்வந்தது. 

அதன்படி இன்று பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியதால், உமாமகேஸ்வரி வீட்டில் இருந்து வேனில் தேர்வு மையத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதையடுத்து உமாமகேஸ்வரி தேர்வெழுத்துவதற்குத் தேவையான இடவசதி அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், உமாமகேஸ்வரி தமிழ் மொழிப்பாட தேர்வை ஆர்வமுடன் எழுதினார். 

இது தொடர்பாக மாணவி உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது, "மாடியில் இருந்து கீழே விழுந்ததில் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த நிலையிலும் பொதுத்தேர்வு எழுத கடந்த சில வாரங்களாக தயாராகி வந்தேன். 

நான் தேர்வு எழுதுவதற்கு எனது பெற்றோரும், பள்ளி நிர்வாகமும் முழு ஒத்துழைப்பு வழங்கியது. இந்த பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவம் படிப்பேன்" என்றுத் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near madurai injured student write plus 2 public exam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->