மெரினா அருகே பெண்ணின் கழுத்தை அறுத்து நகை, பணம் கொள்ளையடித்த கும்பல் - ஒருவர் கைது.! - Seithipunal
Seithipunal


சென்னை மெரினா கடற்கரை அருகே இன்று நள்ளிரவு ஒரு பெண் ஆட்டோ உள்ளே இருந்துள்ளார். அப்போது, மதுபோதையில் வந்த நான்கு  பேர் கொண்ட கும்பல் மழை பெய்வதால் நாங்களும் இங்கு கொஞ்ச நேரம் இருக்கிறோம் என்று தெரிவித்தனர். 

இதையும் நம்பி அந்த பெண்ணும் இருந்துள்ளார். அப்போது, திடீரென அந்த கும்பல், அந்த பெண்ணை தாக்கி கழுத்தை அறுத்துவிட்டு காதில் இருந்த தங்க கம்மல், கையில் இருந்த 10 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். 

இதனால், அந்த பெண் அவர்களை பிடிக்குமாறு கூச்சலிட்டதும், நான்கு பேர் கொண்ட கும்பல் வேகமாக ஓடியதையதையும் பார்த்து சந்தேகமடைந்த போலீசார் அந்த கும்பலை துரத்தி சென்றனர். 

இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரில் மூன்று பேர் தப்பியோடிய நிலையில் ஒரு நபர் மட்டும் மெரினா கடற்கரையில் இறங்கி கடலுக்குள் குதித்தார். அந்த நபரை போலீசார் துரத்தி பிடித்தனர். அதன் பின்னர் அந்த நபர் ஐனாவரத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பது தெரியவந்தது. 

ஏற்கனவே சந்தோஷ்குமார் மீது கொலைமுயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது. இதேபோல், தப்பியோடிய மூன்று பேரும் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

அவர்களையும் பிடிப்பதற்கு போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதையில் நான்கு பேர் கொண்ட கும்பல் தாக்கி கழுத்தறுத்ததில் பாதிக்கப்பட்ட பெண் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near merina beach youngman arrested for attack woman robbery


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->