புதுக்கோட்டை : நாய்களுக்கு இரையாகும் ஆடுகள்.! போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலத்தில் கடந்த மாதம் வெறி நாய் ஒன்று ஆறுக்கும் மேற்பட்ட மனிதர்களையும் பல கால்நடைகளையும் கடித்தது. இதே போன்று, வடகாடு கிராமத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 10 க்கும் மேற்பட்ட ஆடுகளை நாய்கள் கடித்துள்ளது. இதனால் ஊராட்சி நிர்வாகம் நாய்களைப் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் இன்று வடகாடு, குந்தடிபுஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் பாலச்சந்தர். இவர் தனது தோட்டத்தில் கயிற்றில் கட்டி வைத்திருந்த எட்டு ஆடுகளை நாய்கள் கடித்துக் குதறி போட்டுள்ளது. 

இதை பார்த்த பாலச்சந்தர் குடும்பத்தினர் இறந்துக் கிடந்த ஆடுகளைப் பார்த்துக் கதறி அழுதனர். அதன் பின்னர் அவரின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் நாய்கள் இறந்த ஆடுகளைத் தூக்கிக்கொண்டு வந்து வடகாடு கடைவீதியில் பட்டுக்கோட்டை - புதுக்கோட்டை சாலையில் போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்படும் ஆடுகள் தொடர்ந்து நாய்களுக்கு இரையாவது மிகுந்த வேதனையளிக்கிறது. இந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன் நாய்களைப் பிடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near putukottai dogs bite goat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->