நள்ளிரவில் நேர்ந்த கொடூர சம்பவம் : ஆம்னி பேருந்து மீது லாரி மோதல் - 5 பேர் உயிரிழப்பு.!   - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த திருநாவுக்கரசு, ரவிக்குமார், செந்தில்வேலன், சுப்பிரமணி உள்பட அவர்களது குடும்பத்தினர் 7 பேருடன்  சென்னையில் நடைபெறும் உறவினர் வீட்டு விழாவுக்கு செல்ல ஒரு ஆம்னி பேருந்தில் டிக்கெட் எடுத்து இருந்தனர். 

அந்த ஆம்னி பேருந்து சேலத்தில் இருந்து நேற்று இரவு 11.30 மணிக்கு சென்னைபுறப்பட்டது. அந்த பேருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அந்த பேருந்து நள்ளிரவு 12.45 மணி அளவில் பெத்தநாயக்கன்பாளையத்திற்கு வந்தடைந்தது. 

அங்கு வந்த பேருந்து பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு நின்றதைத்தொடர்ந்து உறவினர் வீட்டு விழாவிற்கு செல்வதற்காக திருநாவுக்கரசு உள்பட அவரது உறவினர்கள் பேருந்தின் வலது பக்கமாக நின்று கொண்டு உடைமைகள் மற்றும் சீர்வரிசை பொருட்களை பேருந்தில் ஏற்றிக்கொண்டு இருந்தனர். 

அதே நேரத்தில் சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்ற டிப்பர் லாரி பேருந்தின் வலது பக்கத்தில் கண்இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதிவிட்டு, உரசியபடி சென்றது. இந்த விபத்தில் திருநாவுக்கரசு, ரவிக்குமார், செந்தில்வேலன், சுப்பிரமணி மற்றும் பேருந்து கிளீனர் ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

பேருந்து மீது மோதிய லாரியின் சக்கரத்தில் கிளீனரின் உடல் சிக்கி, சிறிது தூரம் இழுத்து சென்றது. இதனால் அந்த பகுதி ரத்தக்கறையாக காட்சி அளித்தது. மேலும் இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் இருந்த பயணிகள் சிறு காயமின்றி தப்பித்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஏத்தாப்பூர் மற்றும் வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

இந்த விபத்து குறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நள்ளிரவில் நடந்த இந்த விபத்தால் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆம்னி பேருந்து மீது டிப்பர் லாரி மோதி 5 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near salem amni bus accident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->