தலைமையாசிரியரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட ஆசிரியை..! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் நங்கவள்ளியை சேர்ந்த கீதாஞ்சலி என்பவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில், பொட்டனேரியை சேர்ந்த உமா என்பவர் 6, 7, 8-ம் வகுப்புக்கு அறிவியல் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், அறிவியல் ஆசிரியரான உமா என்பவர் நேற்று மதியம் பள்ளிக்கு எதிரே உள்ள தாரமங்கலம்- வனவாசி சாலையில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, அப்பள்ளியில் உள்ள சக ஆசிரியைகள் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை பள்ளிக்குள் அழைத்துச் சென்றனர். 

இந்த சம்பவத்தை அடுத்து மக்கள் அனைவரும் ஒன்று திரண்டனர். இந்த தகவல் அறிந்த நங்கவள்ளி வட்டார கல்வி அதிகாரிகள் சரோஜா, மாலதி இதுகுறித்து விசாரானை நடத்தி வந்தனர். மேலும், இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், 

"கீதாஞ்சலிக்கும், உமாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில், நேற்று நடந்த அறிவியல் தேர்வு பொறுப்பை உமாவுக்கு வழங்காமல் வகுப்பு ஆசிரியையிடம் கீதாஞ்சலி வழங்கியுள்ளார். அதை கண்டிக்கும் வகையில் உமா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த விசாரணை அறிக்கைைய முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near salem teacher strike against in headmaster


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->